25 September, 2023

நடிகைகளுடன் போட்டிப் போட தயாராகும் ஜனனி

முன்னணி நடிகைகளுடன் ஜோடிப் போடும் அளவிற்கு அழகாய் மாறிப் போயிருக்கிறார் பிக்பாஸ் ஜனனி.

பிக்பாஸ் ஜனனி

பிரபல தொலைக்காட்சியொன்றில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்துக் கொண்டனர், இதில் இலங்கையைச் சேர்ந்த ஜனனியும் பங்குபற்றியிருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் இவர் 70 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து விட்டு குறைவான வாக்குகளால் வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின் பல படவாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. மேலும், தளபதி விஜய்யின் லியோ திரைப்படத்தில் நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் ஜனனி இதுநாள் வரையில் பார்த்திராதது போல அழகான புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியிருக்கிறார்.

இந்தப்புகைப்படத்தில் பார்ப்பதற்கு ஹிரோயின் போல வெள்ளை நிற உடையில் வித்தியாசமான ஹேர் ஸ்டைல் போட்டு அழகாக மாறியிருக்கிறார்.

இதனைக் கவனித்த இணையவாசிகள் பலரும் பல விதமான கமெண்டுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

Share