சுனைனா
நடிகை சுனைனா தமிழில் காதலில் விழுந்தேன் படத்தின் மூலமாக அறிமுகம் ஆனவர். அதனை தொடர்நது பல படங்களில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார். தற்போதும் ஹீரோயினாக சில படங்களில் நடித்து வருகிறார் அவர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக சுனைனா சமூக வலைத்தளங்களில் எந்த பதிவும் போடாத நிலையில் அவர் கடத்தப்பட்டுவிட்டதாக ஒரு வீடியோ ட்விட்டரில் வைரல் ஆனது. அதை பார்த்து அதிர்ச்சியான பலரும் #RescueSunaina என பதிவிடவும் தொடங்கினார்கள்.
போலீஸ் விசாரணை
இந்நிலையில் போலீசார் இது பற்றி விசாரணை நடத்தி சுனைனா கடந்த சில தினங்களாக எங்கெல்லாம் சென்றார் என்கிற விவரங்களை விசாரித்து இருக்கின்றனர். மேலும் அவர் வழக்கமாக செல்லும் இடங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது.
அதன் பின் தான் அந்த வீடியோ பற்றிய உண்மை தெரியவந்திருக்கிறது. சுனைனா அடுத்து ரெஜினா என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன் ப்ரோமோஷனுக்காக தான் தயாரிப்பு நிறுவனம் இப்படி ஒரு வீடியோவை பரப்பி விட்டிருக்கின்றனர்.
ப்ரோமோஷனுக்காக இப்படியா செய்வது என நெட்டிசன்கள் பலரும் தற்போது திட்டி வருகிறார்கள்.