25 September, 2023

நடைபாதையாக கதிர்காமத்திற்கு யாத்திரை சென்ற பெண்ணிற்கு நேர்ந்த சோகம்

கதிர்காமத்திற்கு நடைபாதை யாத்திரையில் கலந்து கொண்டிருந்த பெண்ணொருவர் காட்டுயானை தாக்குதலுக்கு இலக்காகி நேற்றையதினம் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

குறித்த பெண் கதிர்காமத்திலிருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தீர்த்த கிணற்று பகுதிக்கு சென்றபோதே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண் சுமார் 63 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

Share