23 September, 2023

நான்காவது பெண்ணாக பிறந்ததால் தமிழ் சினிமா நடிகை சினேகா பட்ட கஷ்டம்! இப்படி எல்லாம் செய்தார்களா

சினேகா

நடிகை சினேகா தமிழ் சினிமாவில் 2000 வருடத்தில் அறிமுகமாகி பல முக்கிய ஹீரோக்களின் படங்களில் நடித்து இருக்கிறார். அவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் தற்போது அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

சினேகா படங்களில் குணச்சித்திர ரோல்களில் நடிப்பது மட்டுமின்றி தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்று வருகிறார்.

பெண்ணாக பிறந்ததால்..

சினேகா அவரது வீட்டில் நான்காவது பெண்ணாக தான் பிறந்தாராம். பெண் குழந்தை பிறந்துவிட்டதால் பாட்டி மூன்றுநாட்கள் அருகில் கூட வரவில்லையாம்.

மூன்றுக்கு ஒன்று ப்ரீ என அவரது அண்ணன் இவரை கிண்டல் செய்வாராம். மேலும் வீட்டில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டு சினேகாவை எல்லா வேலைகளையும் செய்ய வைப்பார்களாம்.

எதிர்த்து கேட்டால், ‘நீ பொண்ணு நான் ஆண்’ என சொல்வார்களாம். அந்த அளவுக்கு வீட்டில் பட்ட கஷ்டம் பற்றி சினேகா எமோஷ்னலாக கூறி இருக்கிறார்.

Share