29 May, 2023

நான் ராஷ்மிகாவை காதலிக்கல..நாங்கள் நண்பர்கள் மட்டும் தான். ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்கு அடிக்கடி செல்வதால் எதேச்சையாக சந்தித்துக்கொள்வோம் ‍‍‍‍‍‍‍..பேட்டி கொடுத்த பிரபல நடிகர்

ராஷ்மிகா

நேஷ்னல் கிரஷ் என சொல்லும் அளவுக்கு மிகப்பெரிய அளவுக்கு ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறார் ராஷ்மிகா. தற்போது ஹிந்தி சினிமாவிலும் நடிக்க தொடங்கி இருக்கும் ராஷ்மிகாவுட் இன்ஸ்டாவில் மட்டும் கிட்டத்தட்ட 4 கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்.ராஷ்மிகா அவர்களுக்காகவே தொடர்ந்து ட்ரெண்டி மற்றும் கிளாமராக போட்டோக்கள் வெளியிட்டு வருகிறார்.

ராஷ்மிகா பற்றிய காதல் கிசுகிசுக்களும் அடிக்கடி வருகின்றன. அவர் விஜய் தேவரகொண்டா உடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவர்கள் இருவரும் அது பற்றி வெளிப்படையாக பேசவில்லை.

மறுத்த நடிகர்

சில வாரங்களுக்கு முன்பு ராஷ்மிகா தெலுங்கு நடிகர் பெல்லம்கொண்ட சாய் ஸ்ரீனிவாஸை டேட்டிங் செய்து வருகிறார் என புது தகவல் ஒன்று பரவியது. அவர்கள் ஒன்றாக விமான நிலையம் வரும் ஸ்டில்களும் வைரல் ஆனது.

இந்த நிலையில் தற்போது சாய் ஸ்ரீனிவாஸ் அளித்த பேட்டியில் தான் ராஷ்மிக்காவை காதலிக்கவில்லை என கூறி இருக்கிறார்.

Share