25 September, 2023

நிலவை நெருங்கும் சந்திரயான் !!

இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம், இன்று நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழையும் என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (Indian Space Research Organization) இஸ்ரோ அறிவித்துள்ளது.

சந்திரயான்-3 விண்கலத்தை சுமார் ரூ.615 கோடியில் இந்திய விண்வெளி ஆய்வு   நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது – இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் சுமாா் 615 கோடியில் செலவில் உருவான சந்திரயான் 3 விண்கலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து கடந்த மாதம் 14 ஆம் தேதி எல்.வி.எம்.-3-எம்-4 ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.

வவட்டப்பாதையின் இறுதிச்சுற்றை வெற்றிகரமாக நிறைவு செய்த விண்கலம், கடந்த முதலாம் திக‌தி நிலவின் சுற்றுப்பாதையை நோக்கிய பயணத்தை தொடங்கி இருந்தது.

இந்த நிலையில் நிலவை நோக்கிய பயணத்தின் அடுத்தகட்டமாக இன்று (05.08.2023) சந்திரயான் 3 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழையும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இன்று மாலை 7 மணிக்கு நிலவின் சுற்றுப்பாதைக்குள் செல்லும் முக்கிய கட்டத்தை சந்திரயான் 3 நெருங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share