கங்குவா
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா அடுத்து கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில வாரங்களாக கொடைக்கானல் காட்டு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் அந்த படத்தின் ஷூட்டிங் அடர்ந்த காட்டில் ரிஸ்க் எடுத்து நடத்தி இருக்கின்றனர்.
ஜோதிகா உடன் சூர்யா
ஷூட்டிங் இல்லாத நேரங்களில் சூர்யா அவரது மனைவி ஜோதிகா உடன் கொடைக்கானலில் பல இடங்களை சுற்றி பார்த்து இருக்கிறார்.
தற்போது கோடை விடுமுறையில் கொடைக்கானலில் மக்கள் கூட்டம் அலைமோதும் நிலையில் அவர்கள் கண்ணில் படாமல் சூர்யா குடும்பத்துடன் கொடைக்கானலை சுற்றி பார்த்து இருக்கிறாராம்.