23 September, 2023

பட வாய்ப்பை தவறவிட்ட நயன்தாரா..மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்த நித்யா மேனன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் நடிப்பில் அடுத்ததாக ஜவான் திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தை எதிர்பார்த்து தான் ரசிகர்கள் அனைவரும் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

நடிகை நயன்தாரா பல சூப்பர்ஹிட் படங்களை தனது திரை வாழ்க்கையில் கொடுத்துள்ளார். அதே போல் சில சூப்பர்ஹிட் படங்களையும் அவர் தவறவிட்டுள்ளார்.

அப்படி அவர் தவறவிட்ட திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். தனுஷ் நடிப்பில் மித்ரன் ஆர். ஜவகர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் திருச்சிற்றம்பலம்.இப்படத்தில் கதாநாயகி ஷோபனா கதாபாத்திரத்தில் நடிகை நித்யா மேனன் நடித்து மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்தார். ஆனால், இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிப்பதாக இருந்தது நயன்தாரா தானாம்.

Share