23 September, 2023

பண்டாரவளையில் பயங்கர விபத்து சம்பவம்: இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

பண்டாரவளையில் பார ஊர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த  விபத்து சம்பவம் இன்றைய தினம் மாலை பண்டாரவளை – ஹப்புத்தளை வீதியில் ஓத்தகடை புகையிரத கடவைக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து பண்டாரவளை பகுதிக்கு பொருட்களை ஏற்றி வந்த பார ஊர்தியொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

பார ஊர்தி கட்டுகாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

பார ஊர்தியின் சாரதியான 44 வயதுடைய நபர் படு காயமடைந்த நிலையில் தியதலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாரவூர்தியின் உதவியாளர் தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.