23 September, 2023

பருவமெய்த ஹார்மோன் ஊசி போட்டாரா ஹன்சிகா? ரகசியத்தை போட்டுடைத்த தாய்!

ஹன்சிகா

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. 50க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். தமிழில் தனுஷ் நடித்த ’மாப்பிள்ளை’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

அதன்பின் அவர் எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, சிங்கம் 2 உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். சமீபத்தில், சோஹேல் கதுரியா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

தாய் விளக்கம்

இந்நிலையில், சில ஆண்டுகளிலேயே அவர் ஹீரோயினாக அறிமுகமானதால் அவர் அதிவேகமாக வளர்வதற்காக ஹார்மோன் ஊசி செலுத்திக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கு பதிலளித்துள்ள அவரது தாய், எங்களுக்கு இது மிகவும் மன வேதனையை அளித்தது, பல வருடங்களாக மௌனமாக இருந்தோம். ஹன்சிகா சீக்கிரமாக வளர வேண்டும் என்பதற்காக ஏதோ ஊசி போட்டிருப்பதாக என் மீது குற்றம் சாட்டினார்கள். எந்த ஊசி என்று சொல்லுங்கள், நான் பணக்காரி ஆகிறேன்.

எல்லோரிடமும் கொடுத்து பணத்தை சம்பாதிக்கிறேன். எந்த தாயாவது இதுபோன்று செய்வார்களா? இல்லை அதுபோல் வேகமாக வளர ஏதும் ஊசி உள்ளதா எனப் பேசியுள்ளார்.

Share