25 September, 2023

பிரபல நடிகருடன் நடிகர் விஜய்யின் மகன் மற்றும் மகள் எடுத்த அழகிய புகைப்படம்-

நடிகர் விஜய்

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். வாரிசு படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் இப்போது லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

படத்திற்கான படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கி சென்னையில் தொடர்ந்து நடந்து வந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன் விஜய் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பும் முடிவுக்கு வந்தது. அடுத்து விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்க இருக்கிறார், மற்றபடி படம் குறித்து வேறு எந்த தகவலும் சரியாக வெளியாகவில்லை.

அழகிய போட்டோ

விஜய்யின் குடும்பத்தில் இருப்பவர்களின் புகைப்படங்கள் அவ்வளவாக வெளியானதில்லை, அவரது மகன் மற்றும் மகளும் வெளியே வந்தது இல்லை.

அப்படி தெறி படத்தின் படப்பிடிப்பின் போது மொட்டை ராஜேந்திரனுடன் விஜய்யின் மகன் மற்றும் மகள் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது. தற்போது ரசிகர்கள் அந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.

Share