30 May, 2023

பொன்னியின் செல்வன் 2 செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா?….

பொன்னியின் செல்வன் 2

பொன்னியின் செல்வன் 2 கடந்த 28ஆம் தேதி வெளிவந்தது. முதல் பாகம் மாபெரும் வெற்றியடைய இரண்டாம் பாகத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

ரூ. 500 கோடிக்கும் மேல் உலகளவில் முதல் பாகம் வசூல் செய்திருந்த நிலையில், இரண்டாம் பாகம் அந்த வசூல் சாதனையை முறியடிக்குமா என கேள்வி எழுந்தது.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 வெளிவந்த இரண்டு நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்

அதன்படி, வெளிவந்து இரண்டு நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இரண்டே நாட்களில் ரூ. 100 கோடியை கடந்திருந்தாலும், பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை விட இரண்டு நாட்கள் வசூலில் இரண்டாம் பாகம் வசூலில் சற்று குறைவு தான் என தகவல் தெரிவிக்கின்றனர்.

Share