tamil cinema : உலகின் எப்பேர்ப்பட்ட உறவு வந்தாலும் கருவில் இருந்து நம்முடைய வாழ்வின் இறுதிவரை பயணிக்கும் தாயின் பாசத்திற்கு எதுவும் ஈடாகாது. தாய் என்பவள் தன் குழந்தைகளுக்காக எதை வேண்டுமானாலும் செய்வார் என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்த ஒன்று.
அப்படியான சம்பவம் ஒன்று மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. அங்கு மகன் கஷ்டப்படுவதை பார்க்க விரும்பாத தாய் ஒருவர் பிச்சை எடுத்து ரூ80 ஆயிரத்தை நாணயமாக கொடுத்து தன் மகனுக்காக ஸ்கூட்டி வாங்க பணம் கொடுத்துள்ளார்.
அங்குள்ள நாடியா மாவட்டத்தில் நடந்துள்ள இச்சம்பவத்தில் மகன் கூலி வேலைக்கு செல்லும் தினக்கூலியாக இருந்து வந்த நிலையில் தாய் பிச்சை எடுத்து பிழைத்து வந்துள்ளார். இதனிடையே மகனுக்கு நீண்ட நாட்களாக ஒரு ஸ்கூட்டி ஒன்று வாங்க வேண்டும் என கனவு இருந்துள்ளது.
தன்தாயிடம் இதுபற்றி பேசிய நிலையில் மகனுக்காக அந்த தாய் ரூ,.80 ஆயிரம் பணத்தை நாணயங்களாக வழங்கியள்ளார். இதனை ஷோரூம் ஒன்றிற்கு வாளியில் கொண்டு சென்ற அவர் அந்த பணத்தை கொடுத்து ஸ்கூட்டி வாங்கியுள்ளார்.இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில் பலரும் அந்த தாய்க்கு தங்களது பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.