24 September, 2023

மனோபாலாவின் மனைவி அவர் இறப்பிற்கு பின்னர் செய்த தானம்! வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள்

சினிமா பயணம்

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகருமாக வலம் வந்தவர் தான் நடிகர் மனோபாலா. இவருக்கு தற்போது 69 வயது தான் ஆகிறது.

இவர் தாய்மாமன், தோழர் பாண்டியன், நந்தினி, நட்புக்காக, தலைமுறை, தாஜ்மகால் உட்பட 175 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

ரஜினி, கமல், அஜித், விஜய், தனுஷ்உட்பட பல முன்னணி நடிகர்களுடன் மனோபாலா நடித்துள்ளார்.

இந்த நிலையில்,உடல் நிலை குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது இவரின் உடல் நிலை மோசமாகி உயிரிழந்து விட்டார்.

மனைவி செய்த நெகிழ்ச்சி சம்பவம்

மேலும் மனோபாலாவிற்கு உடலில் ஏற்பட்ட சில கோளாறுகள் தான் காரணம் எனவும் குறித்த செய்திகள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் மனோபாலாவின் மனைவி உஷா கணவர் வைத்திருந்த ஆடைகள் அனைத்தையும் தானம் செய்துள்ளாராம்.

மேலும் மனோபாலாவின் வாட்சை மட்டும் ஞாபகத்திற்கு வைத்து கொண்டு, துணிகளை ஏறிக்காமல் தானம் செய்த விடயம் பலரின் நெஞ்சங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செய்தியை பார்த்த இணையவாசிகள், உஷாவிற்கு வாழ்த்துக்கள் பதிவு செய்து வருகிறார்கள்.

 

Share