நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மத்திய மலைநாட்டிலும் மழையுடனான காலநிலை நிலவி வருகிறது.
அந்த வகையில் ஹட்டன்- கொழும்பு பிரதான வீதி மற்றும் ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதிகளில் கடும் பனி மூட்டம் காணப்படுவதனால் இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீதிகளில் பனிமூட்டம்
மழை மற்றும் பனி காணப்படும் பகுதிகளில் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச்செய்தவாறு மிகவும் எச்சரிக்கையுடன் வாகனத்தை செலுத்துவதன் மூலம் வீதி விபத்துக்களை தவிர்த்து கொள்ளலாம் என பொலிஸார் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை தொடர்ச்சியான மழையினால் மண் சரிவு மற்றும் கற்கள் புரளும் அபாயமும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.