பிரபல சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் ஆகியோரது திருமணம் பற்றி தான் கடந்த ஒரு வாரத்திற்கு முன் பரபரப்பாக பலரும் பேசினார்கள்.
மஹாலக்ஷ்மி பணத்திற்காக தான் அவரை திருமணம் செய்து கொண்டார் என்று விமர்சனம் எழுந்தது. வந்த ட்ரோல்கள் அனைத்திற்கும் அவர்கள் பேட்டி கொடுத்து பதிலடி கொடுத்தனர். மேலும் அவர்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்ற போட்டோக்களையும் வெளியிட்டு இருந்தனர்.
இந்நிலையில் இன்று ரவீந்தர் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை போட்டிருக்கிறார். இன்று ஞாயிற்றுக்கிழமை என்றாலும் மஹாலக்ஷ்மி ஷூட்டிங் இருக்கிறது என சொல்லி காலையிலேயே கிளம்பி சென்றுவிட்டாராம்.
மஹாலக்ஷ்மி அதை எடுத்துட்டு வரலனா மாமியார் கொடுமை தான்: ஒரே வாரத்தில் மாறிய ரவீந்தர் | Ravinder Chandrasekar Takes Lunch To Mahalakshmi
மாமியார் கொடுமை?
அவருக்கு புரட்டாசி 1 ஸ்பெஷலாக வெஜிடேரியன் சாப்பிடு செய்து அதை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கொண்டு சென்று இருக்கிறார் ரவீந்தர்.
“சண்டே family time என எல்லோரும்சொல்கிறார்கள். ஆனால் எனக்கு துரதிஷ்டவசமாக வேறு விதமாக இருக்கிறது. அன்பே வா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நான் சாப்பாடு எடுத்து செல்லும் டன்ஸோ டெலிவரி பாய் ஆகிவிட்டேன்.”
“பொண்டாட்டி மஹாலக்ஷ்மி ஷங்கர்.. எல்லா பாத்திரத்தையும் வீட்டுக்கு திருப்பி கொண்டுவந்துவிடு. இல்லை என்றால் மாமியார் கொடுமை மட்டுமின்றி.. அம்மா என்னையும் டன்ஸோவில் சேர வைத்துவிடுவார்” என ரவீந்தர் தெரிவித்து இருக்கிறார்.