இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி நாட்டில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களில் 25 சதவீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது
இன்றைய தினம் (11.06.2023) ஊடகத்திற்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டெங்கு நுளம்பு பரவுவதைத் தடுக்கும் வகையில், பாடசாலை வளாகங்களைச் சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் நேற்றைய தினமும் (10.06.2023) இன்றைய தினமும் (11.06.2023) முன்னெடுக்கப்படுகிறது.
டெங்கு அபாயப் பிரதேசங்கள்
நாளைய தினம் (12.06.2023) பாடசாலை கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் இந்த செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.