29 May, 2023

முன்னணி ஹீரோவின் ரசிகர்கள் செயலால் பற்றி எறிந்த தியேட்டர்! பரபரப்பு சம்பவம்

தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ஜூனியர் என்டிஆர். அவர் நடித்த ஆர்ஆர்ஆர் படம் ஆஸ்கருக்கு சென்று சிறந்த பாடலுக்கான விருதையும் பெற்று வந்ததால் ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடினார்கள்.

தற்போது அடுத்து ஜூனியர் என்டிஆர் கேஜிஎப் இயக்குனர் உடன் கூட்டணி சேர இருப்பதாக வந்திருக்கும் அறிவிப்பையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

எரிந்த தியேட்டர்

சமீபத்தில் ஜூனியர் என்டிஆரின் பிறந்தநாளை கொண்டாட அவரது 2003ம் ஆண்டு படமான சிம்ஹாத்ரியை மீண்டும் தியேட்டரில் ரீரிலீஸ் செய்து இருக்கின்றனர்.

அப்போது ரசிகர்கள் பட்டாசு வெடித்ததில் தியேட்டர் தீப்பற்றி எரிந்து இருக்கிறது. விஜயவாடாவில் இருக்கும் ஒரு தியேட்டர் தான் இப்படி எரிந்து இருக்கிறது.

Share