லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா பிரபலம் ஒருவரை பாராட்டி மெசேஜ் அனுப்பியுள்ளார்.
காமெடி படமான குட் லக் ஜெர்ரியில் நடித்தவர் தான் நடிகை ஜான்வி கபூர். இவர் நடிகை நயன்தாரா நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியானது கோலமாவு கோகிலா திரைப்படம்.
இந்த திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.இந்த ஹிந்தி திரைப்படத்தின் ரீமேக்கின் டிரெய்லரை பார்த்த நயன்தாரா, நடிகை ஜான்வியை பாராட்டி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பேட்டி ஒன்றில் நடிகை ஜான்வி கபூர் குட்லக் ஜெர்ரியில் நடித்த அனுபவம் குறித்தும், நயன்தாரா தனக்கு அனுப்பிய மெசேஜ் குறித்தும் பேசினார்.
நயன்தாரா என்னை பாராட்டிய செய்தியை அறிந்ததும் அவரின் எண்ணை வாங்கி அவருக்கு நன்றி தெரிவித்தேன். அப்போது தனக்கு அவர் பதிலளிப்பார் என நான் எதிர்பார்க்கவில்லை.ஆனால் அவர் எனக்கு ரிப்ளை செய்தார்.
அவர் அனுப்பி ரிப்ளை மெசேஜில் திரைத்துறை வாழ்க்கையில் ஆரம்ப கட்டத்திலேயே இப்படியான தைரியமான கதையை தேர்வு செய்து நடித்ததற்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
இது உங்களுக்கான அருமையான வாய்ப்பு, இந்த அதிர்ஷ்டம் இன்னும் கிடைக்கும் என கூறினார். நயன்தாராவின் இந்த பதிலால் நான் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன்.
அந்த நாள் முழுவதும் நான் குதுாகலமாக இருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், சிறந்த பொழுதுபோக்கு படமாக குட்லக்ஜெர்ரி எடுக்கப்பட்டிருப்பதாகவும், ரசிகர்கள் எதிர்பார்க்கும் ரசனையுடன் படம் இருப்பதால் நிச்சயம் வெற்றி பெறும். இதைவிட சிறந்த ஜெர்ரி இருக்க முடியாது என்றும் நயன்தாரா தெரிவித்ததாக ஜான்வி கபூர் தெரிவித்தார்.