21 March, 2023

யாருக்கு பெரிய நாக்கு இருக்கிறது என்று அளந்து பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா..?

பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி மற்றும் நடிகை ஆண்ட்ரியா ஆகிய இருவரும் யாருடைய நாக்கு பெருசு அளந்து பார்த்து விடலாம் என்று போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய நாக்கை நீட்டியபடி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சின்னத்திரையில் “தடயம்” என்ற திகில் தொடரில் நடிகையாக அறிமுகமான திவ்யதர்ஷினி தொடர்ந்து தொகுப்பாளினியாக அவதாரம் எடுத்து தற்போது வரை தொகுப்பாகவே தன்னுடைய பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

அவ்வப்போது சினிமா மற்றும் சீரியலில் தோன்றும் இவர் தன்னுடைய பிரதான வேலையாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை செய்து வருகின்றார். தொகுப்பாளினியாக மட்டுமே இருந்து கோடிகளில் சொத்து சேர்த்த ஒருவர் என்றால் அது திவ்யதர்ஷினியாக மட்டும் தான் இருக்க முடியும்.

இடையில் தன்னுடைய நீண்ட நாள் நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை திவ்யதர்ஷினி சில மாதங்களில் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தார். அந்த பிரிவு அப்படியே நீண்டு விவாகரத்து வரை கொண்டு சென்றது.

இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியாவுடன் இவர் எடுத்துக்கொண்ட சில செல்பி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமானார் நடிகை ஆண்ட்ரியா.

ஒரு கட்டத்தில் சினிமாவில் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்தார் முதல் கட்டமாக நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

அதன்பிறகு குணச்சித்திர வேடங்களிலும், ஹீரோயினாகவும் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் விழா விழா ஒன்றில் பாடுவதற்காக சென்ற நடிகை ஆண்ட்ரியா அந்த விழாவிற்கு தொகுப்பாளினியாக வந்திருந்த திவ்யதர்ஷினி உடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் யாருக்கு பெரிய நாக்கு இருக்கிறது என்று அளந்து பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா..? என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Share