25 September, 2023

யார் சூப்பர் ஸ்டார்? ரஜினியா அல்லது விஜய்யா..

சூப்பர்ஸ்டார் யார்

கடந்த சில ஆண்டுகளாகவே தளபதி விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று பேசப்பட்டது. மேலும் சமீபகாலாமாக தற்போதைய தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் விஜய் தான், ரஜினி கிடையாது என்பது போல் பேச துவங்கிவிட்டனர்.

அண்மையில் நடந்த ஜெயிலர் இசை வெளியிட்டு விழாவில் கூட ‘சூப்பர்ஸ்டார் பட்டம் என்றைக்குமே தொல்லை தான்’ என ரஜினிகாந்த் கூறியிருந்தார். சூப்பர்ஸ்டார் யார் என்ற விவாதம் தொடர்ந்து கொண்டே வரும் நிலையில், இதுகுறித்து தளபதி விஜய் பேசியுள்ள சில விஷயங்கள் தற்போது விஜய் ரசிகர்களால் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

சர்ச்சைக்கு தளபதியே கூறிய பதில்

விஜய் தொலைக்காட்சியில் ஒரு முறை விஜய்க்கு விருது வழங்கப்பட்டது. அப்போது, தொகுப்பாளினி டிடி ‘உங்களுக்கு தளபதி விஜய்யாக இருக்க பிடித்திருக்கிறதா அல்லது அடுத்த சூப்பர் ஸ்டாராக இருக்க பிடித்திருக்கிறதா’ என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த விஜய் ‘நான் என்றும் பழசை மறக்க மாட்டேன். எனக்கு முதன் முதலில் மக்கள் கொடுத்த பட்டம் தளபதி. அதனால் அதிலிருந்து நான் போக மாட்டேன்’ என கூறினார்.

பின் ரசிகர்களுடன் ஏற்பட்ட லைவ் கலந்துரையாடலில் இதுகுறித்து பேசிய விஜய் ‘என்றும் ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் தான், அவர் தலைவர் மட்டும் தான்’ என கூறினார்.

இதன்பின் தொலைக்காட்சி நேரலையில் இதைப்பற்றி கேள்வி எழுந்தபோது ‘என்னை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. எந்த துறையிலும் ஒருவர் என்ட்ரியாகும் போது, அந்த துறையில் நம்பர் 1 ஆகவேண்டும் என்று தான் நினைப்பார்கள். அது இயல்புதான். ஆனால், என்றைக்குமே சூப்பர்ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டும் தான்’ என கூறியிருக்கிறார்.

இப்படி பல இடங்களில் ரஜினிகாந்த் தான் என்றுமே சூப்பர்ஸ்டார் என விஜய் குறிப்பிட்டுள்ளதை ரசிகர்கள் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்

Share