25 September, 2023

யாழில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்

யாழ்ப்பாணத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்ட பேரணியொன்றை இன்று முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப் போராட்டம் யாழ் முனியப்பர் கோவிலடிவரை பேரணியாகச் சென்று நிறைவுபெற்றதாக தெரிய வந்துள்ளது.