23 September, 2023

ரஜினியின் 171 படத்தை இயக்க கோடியில் சம்பளம் வாங்கும் லோகேஷ் கனகராஜ்!.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் படத்திற்கு ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். தற்போது வரை இப்படம் ரூபாய் 575 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் TJ ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்தின் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப்போவதாக தகவல் வெளியானது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில் ரஜினிகாந்தின் 171 படத்தை லோகேஷ் இயக்க லோகேஷ் கனகராஜுக்கு சம்பளமாக ரூ 60 கோடி பேசப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.