TJ ஞானவேல் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்கவிருக்கும் திரைப்படம் ரஜினி 170. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் அனிருத் இசையமைக்கிறார்.
இதை தவிர இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலும் தயாரிப்பு நிருவனத்திடம் இருந்து வரவில்லை. ஆனால், இப்படத்தில் நடிக்கவிருக்கும் நட்சத்திரங்களின் பெயர்கள் திரை வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
பகத் பாசில், அமிதாப் பச்சன், நாணி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிக்கவிருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
வருகிற 26ஆம் தேதி சென்னையில் உள்ள லீலா பேலஸ் இடத்தில் ரஜினி 170 படத்தின் பூஜை நடைபெறவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். அதன்பின் அனைவரும் எதிர்பார்த்தபடி விறுவிறுப்பாக படப்பிடிப்பு துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.