25 September, 2023

விஜய்க்கு ஓகே.. அஜித்துக்கு நோ சொல்லிய 40 வயது நடிகை..

விஜய் – லியோ

விஜய் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருவதை நாம் அனைவரும் அறிவோம். லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் இப்படத்தை லலித் குமார் தயாரித்து வருகிறார்.

பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வரவிருக்கிறது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து முன்னணி நடிகை திரிஷா நடித்துள்ளார். இந்த ஜோடி 13 வருடங்களுக்கு பின் லியோ படத்தில் தான் இணைந்துள்ளது.

இந்த ஜோடியை திரையில் காணவே ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள். நடிகை திரிஷா தற்போது தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய அளவில் செம பிசியான நடிகையாக மாறிவிட்டார்.

லியோ படத்தை தொடர்ந்து அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்திலும் திரிஷா தான் கதாநாயகி என ஏறக்குறைய உறுதியான தகவல் வெளிவந்தது.

விடாமுயற்சி

ஆனால், விடாமுயற்சியின் படப்பிடிப்பு சில காரணங்களால் தள்ளிப்போய் கொண்டே இருப்பதினால், இப்படத்திற்காக கொடுக்க வைத்திருந்த கால்ஷீட்டை வேறொரு படத்திற்காக கொடுத்துவிட்டாராம் நடிகை திரிஷா.

இதனால் விடாமுயற்சி திரைப்படத்தில் திரிஷா நடிக்க வாய்ப்பு குறைவு என தகவல் வெளியாகியுள்ளது. இதை கேள்விப்பட்ட நெட்டிசன்கள் விஜய்யின் லியோ படத்திற்கு ஓகே சொல்லிவிட்டு, அஜித்தின் விடாமுயற்சி படத்திற்கு நோ சொல்லிவிட்டாரே என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

Share