23 September, 2023

விஜய் சேதுபதி உடன் போட்டியா?

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆன மாவீரன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கும் நிலையில் அதன் வெற்றி விழா இன்று நடந்தது. அதில் பங்கேற்க வந்த சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி பற்றியும் பேசி இருக்கிறார்.

முதலில் அந்த வாய்ஸ் ஓவர் ரோலுக்கு விஜய் சேதுபதி பெயரை தான் இயக்குனர் பரிந்துரைத்தார். இப்படி நடந்தால் அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்கிற ஆசை பாதிக்கப்படக்கூடாது என சிவகார்த்திகேயன் கூறினாராம்.

போட்டியா

விஜய் சேதுபதியுடன் போட்டியா என்றால் இல்லவே இல்லை என சிவகார்த்திகேயன் கூறி இருக்கிறார்.

இரண்டு பேரும் சேர்ந்து நடிக்க இருவருக்கும் முக்கியத்துவம் இருக்கும் ஒரு ஸ்கிரிப்ட் அமைய வேண்டும். அவர் எப்போதும் ரெடியாக தான் இருக்கிறார், நானும் ரெடி தான் எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.

Share