25 September, 2023

விமான நிலையத்தில் கிளாமர் உடையில் நடனம் ஆடிய தமன்னா..

நடிகை தமன்னா

தமன்னா இந்தியளவில் பிரபலமான நடிகை ஆவார். இவர் நடிப்பில் அடுத்ததாக ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தமன்னா ஜெயிலர் படத்தில் காவாலா எனும் பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளார். அந்த பாடல் கடந்த சில தினங்களுக்கு முன் வெளிவந்து படுவைரலாகி வருகிறது.

குறிப்பாக தமன்னாவின் நடனம் ரசிகர்களின் அதிகளவில் கவர்ந்துவிட்டது. எந்த பக்கம் திரும்பினாலும், அந்த நடனத்தை போல் ரசிகர்களும் நடனமாடி வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

விமான நிலையத்தில் ஆட்டம்

இந்நிலையில், இன்று நடிகை தமன்னா விமான நிலையத்திற்கு கிளாமர் லுக்கில் வந்துள்ளார். அப்போது அங்கிருந்து ரசிகர் ஒருவர் தமன்னாவுடன் இணைந்து காவாலா பாடலுக்கு நடனம் ஆடினார்.

Share