23 September, 2023

வில்லனாக மாறும் நடிகர் நவீன்

நடிகர் நவீன் சின்னத்திரையில் மிகவும் பரிட்சயமான நடிகர் தான். மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஆன அவருக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

விஜய் டிவியில் பாவம் கணேசன் என்ற தொடரில் ஹீரோவாக நடித்த நவீன் அந்த சீரியல் முடிந்தபிறகு புது சீரியல் எதிலும் நடிக்காமல் இருந்தார்.

இந்நிலையில் விஜய் டிவியில் விரைவில் தொடங்க இருக்கும் நீ நான் காதல் என்ற புது சீரியலில் நவீன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அந்த சீரியலில் அவர் தான் வில்லன் ரோலில் நடிக்கிறாராம். தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு முக்கிய தொடரின் ரிமேக் தான் இந்த ‘நீ நான் காதல்’ என்ற சீரியல் என்பது குறிப்பிடத்தக்கது.