23 September, 2023

வெளிநாட்டில் பிரம்மாண்ட வீடு வாங்கிய நடிகர் அஜித்! எங்கே தெரியுமா..

நடிகர் அஜித் அடுத்து மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தின் ஷூட்டிங் விரைவி தொடங்க இருக்கிறது. அதில் அஜித்துக்கு வில்லனாக சஞ்சய் தத் நடிக்க போகிறார் என்ற தகவலும் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.

அஜித் நடிப்பது மட்டுமின்றி பைக் ரைடு மற்றும் ட்ரோன்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். விடாமுயற்சி படத்திஅனி முடித்த பிறகு மீண்டும் அஜித் வெளிநாடுகளில் பைக் ட்ரிப் செல்ல இருக்கிறார். அதற்காக சினிமாவில் இருந்தும் பிரேக் எடுக்க போகிறார் எனவும் கூறப்படுகிறது.

நடிகர் அஜித் தற்போது துபாயில் ஒரு பெரிய வீட்டை வாங்கி இருக்கிறாராம். அங்கு செல்லும் போது அவர் தங்கி வருகிறாராம்.

மேலும் விடாமுயற்சி ஷூட்டிங் அங்கே நடக்கும்போது தனது துபாய் வீட்டில் இருந்தே அவர் ஷூட்டிங்கில் பங்கேற்க இருக்கிறார்.