29 May, 2023

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு தொடர்பில் இலங்கையில் இளைஞர் ஒருவரிடம் பாரிய மோசடியில் ஈடுபட்ட இரு பெண்கள்!

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு மோசடி தொடர்பில் இரண்டு பெண்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) இன்று (மே 26) கைது செய்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் உள்ள தொழிற்சாலையொன்றில் வேலை வாய்ப்பு வழங்குவதாக உறுதியளித்து பதுளை இளைஞர்களிடம் இருந்து 1.8 மில்லியன் ரூபாயை மோசடி செய்ததற்காக சந்தேகநபர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசாரணை அதிகாரிகளால் கைது

பதுளை தெமோதர பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் தொடர்பில் நான்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

நடவடிக்கையில் இறங்கிய விசாரணை அதிகாரிகள், செல்லுபடியாகும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அனுமதியின்றி ஆட்களை வேலைக்கு சேர்த்ததற்காக இருவரையும் கைது செய்தனர்.

மேலும், இந்த வேலை மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் மற்றொரு நபர் குறித்து பணியகத்திற்கு புகார்கள் கிடைத்துள்ளன.

இந்த சந்தேக நபரையும் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Share