அஜித் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மங்காத்தா. இப்படத்தில் முதல் முறையாக அஜித்துடன் இணைந்து அர்ஜுன் நடித்திருந்தார்.
மேலும் திரிஷா, ஆண்ட்ரியா, வைபவ், மகத், பிரேம்ஜி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். மாபெரும் வெற்றியடைந்த இப்படம் இதுவரை அஜித்தின் திரை வாழ்க்கையில் டாப் 5 சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கிறது.
இப்படத்திற்காக தான் முதல் முறையாக ரூ. 10 கோடி சம்பளமாக வாங்கினார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது. மங்காத்தா திரைப்படம் வெளிவந்து 12 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், இதை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில், இப்படத்தின் மொத்த பாக்ஸ் ஆபிஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகளவில் மங்காத்தா திரைப்படம் ரூ. 78 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் மட்டுமே ரூ. 52 கோடி வரை இப்படம் வசூல் செய்துள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர்.