29 May, 2023

ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வரும் இளம்பெண்களின் குளியல் அறையின் ஜன்னல் வழியாக தொலைபேசியில் மர்மநபர் ஒருவர் காணொளி எடுத்து மிரட்டிய சம்பவம்

ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வரும் இளம்பெண்களின் குளியல் அறையின் ஜன்னல் வழியாக தொலைபேசியில் மர்மநபர் ஒருவர் காணொளி எடுத்து மிரட்டிய சம்பவம் ஒன்று பெங்களூரில் நடந்துள்ளது.

இந்தியாவில் பெங்களூரு மாநிலத்தில் நிசர்கா லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் ரகுராம் (வயது 42). இவருக்கு சொந்தமாக அந்த பகுதியில் ஹோட்டலில் ஒன்று உள்ளது.

இந்த ஓட்டலில் இளம்பெண்கள் 2 பேர் கணக்காளர் மற்றும் மேலாளராக பணி செய்து வருகின்றனர். அவர்கள் இரண்டு பேரும் ஹோட்டல் தரைத்தளத்தில் உள்ள அறையில் தங்கி வேலை செய்கின்றனர்.

இந்தநிலையில் இளம்பெண்கள் 2 பேரும் ஹோட்டலில் உள்ள குளியல் அறையில் தனித்தனியே குளித்தனர். அப்போது குளியல் அறையின் ஜன்னல் வழியாக செல்போனில் மர்மநபர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.

அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெண், உடனடியாக வெளியே ஓடி வந்துள்ளார். அப்போது தான் ஹோட்டல் உரிமையாளர் ரகுராம் செல்போனில் வீடியோ எடுத்தது தெரிந்தது. அதை அழிக்குமாறு அந்த பெண் ரகுராமிடம் கூறினார்.

அப்போது அவர் வீடியோவை அழிக்க வேண்டும் என்றால், தன்னுடன் உல்லாசமாக இருக்குமாறு கூறி உள்ளார். இதையடுத்து அவர் ஹோட்டலில் வேலை செய்த 2 பெண்களையும் மிரட்டி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில் இளம்பெண்கள் 2 பேரும் இதுதொடர்பாக எச்.ஏ.எல். பொலிஸில் முறைப்பாடு அளித்தனர். முறைப்பாட்டின் பேரில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்ததை அடுத்து ரகுராமை பொலிஸார் கைது செய்தனர்.

Share