24 September, 2023

ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக போலீ சாமியாருடன் கர்ப்பிணி பெண்..!

tamil cinema : பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பெண் தலையில் ஆணியுடன் வடமேற்கு பெஷாவர் நகரில் உள்ள லேடி ரீடிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த பெண்ணின் புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் வைரலானதை அடுத்து பெஷாவர் காவல்துறை இந்த விஷயத்தை கையில் எடுத்தது. பெஷாவர் காவல்துறையின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப்பாஸ் அஹ்சன் இது தொடர்பாக செய்துள்ள ட்விட்டில் “ஆண் குழந்தை என்ற பொய்யான வாக்குறுதியுடன் அப்பாவி பெண்ணின் தலையில் ஆணியை வைத்து விளையாடிய போலி துறவியை (fake Pir) சட்டத்தின் முன் நிறுத்த சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து சிகிச்சை அளித்த மருத்துவர் ஏன் போலீசில் புகார் செய்யவில்லை என்பதையும் குழு விசாரிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் ஏற்கனவே 3 பெண் குழந்தைகளின் தாய் என்றும், நான்காவதாகவும் பெண் குழந்தையை பெற்றெடுத்தால் கைவிட்டு விடுவேன் என கணவர் மிரட்டியதால் அந்த பெண் போலி துறவியின் பேச்சை நம்பி ஆணி அடித்து கொண்டுள்ளதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். கணவனின் மிரட்டலை அடுத்து தன்னை கடவுள் போல காட்டி கொண்ட போலி ஆசாமியிடம் சென்ற அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஒரு தாயத்து, ஓத வேண்டிய பொருள்கள் மற்றும் ஆணி ஆகியவற்றை கொடுத்தார். பாதிக்கப்பட்ட பெண் வீட்டிற்குச் சென்று அந்த போலி துறவி கூறியது போல தன் தலையில் ஆணியை அடித்து கொண்டுள்ளார். இதனால் அவர் வலியால் அலற தொடங்கியதை கண்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது மண்டையிலிருந்து ஆணியை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. போலி துறவி கொடுத்த இரண்டு அங்குல ஆணி பெண்ணின் நெற்றியின் மேல் துளைத்திருந்தது. ஆனால் அது மூளைக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது எக்ஸ்ரே மூலம் தெரிய வந்தது. இதனிடையே அந்த பெண் சிகிச்சைக்கு முன் முதலில் தானே தனது தலையில் ஆணி அடித்து கொண்டதாக கூறி இருக்கிறார். ஆனால் சிறிது நேரத்தில் ஆண் குழந்தை பிறப்பதற்கு உத்தரவாதம் அளித்து குறிப்பிட்ட துறவி தான் தனது தலையில் ஆணியை அடித்ததாகவும் கூறி இருக்கிறார். கர்ப்பிணி பெண் தற்போது சிகிச்சையில் இருப்பதால் உண்மையை அறிய குற்றம் சாட்டப்பட்ட போலி துறவியை அடையாளம் கண்டு கைது செய்ய பெஷாவர் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.