வலையில் சிக்கிய 11 டொல்பின்கள்..!! மீனவர்களின் நெகிழ்ச்சி செயல்..!

நேற்று (05/04/2024) வெள்ளிகிழமை அன்று யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் கரைவலையில் 11 டொல்பின்கள் அகப்பட்டுள்ளன.இதனை அடுத்து வலையில் சிக்கிய 11 டொல்பின்களும் மீண்டும் கடலிலே விடப்பட்டுள்ளன்.கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த அருமைத்துரை சம்மாட்டியின் கரைவலையில் வெள்ளிக்கிழமை காலை 11 டொல்பின்கள் அகப்பட்டுள்ளன.

வலையில் டொல்பின்கள் சிக்கியதை அறிந்த மீனவர்கள் பதினொரு டொல்பின்களையும் உயிருடன் மீட்டு பாதுகாப்பாக கடலில் விட்டுள்ளனர். டொல்பின்களை உயிருடன் கடலுக்குள் அனுப்பிய மீனவர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *