tamil cinema news : அஞ்சு குரியன் நேரம் படம் மூலம் பெரிய திரையில் அறிமுகமானார். இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகை அஞ்சு குரியன், அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய ‘பிரேமம்’ படத்தில் நடிகர் நிவின் பாலியின் தங்கையாக அறிமுகமாகி தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரே நேரத்தில் படமாக்கினார்.

அதன்பிறகு தமிழ் மொழியில் அவர் நடித்த சென்னை 2 சிங்கப்பூர் படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. இதனால், அஞ்சு குரியன் பெரிதும் அறியப்படவில்லை.
மலையாளத்தில் ஓம் சாந்தி ஓசானா படத்தில் நஸ்ரியாவின் தோழியாகவும் பள்ளி மாணவியாகவும் நடித்துள்ளார். மேலும், பிரேமம், பிரகாசன், ஜீபூம்பா போன்ற மலையாள மொழிப் படங்களில் நடித்தார்.

பின்னர் இவர் நடித்த ‘இக்லூ’ திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.
திரைப்படங்கள் மட்டுமின்றி சமூக வலைதள பக்கங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் இவர், போட்டோஷூட், நடன வீடியோக்கள் போன்றவற்றின் புகைப்படங்களை வெளியிட்டு, அதன் மூலம் வாய்ப்புகளை தேடி வருகிறார்.

மாடர்ன் டிரஸ், சேலை, தாவணி அணிந்து வந்த அஞ்சு குரியன், தற்போது நீச்சல் உடை அணிந்து, கையில் ஷாம்பெயின் பாட்டிலுடன் குளத்தில் நடனமாடி வருகிறார்.