சிவகார்த்தி, அவ்ளோ பெரிய அப்பாடக்கரா! கொதிக்கும் தனுஷ் அண்ட்கோ…!

0
26

tamil cinema news : ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் , சிவகார்த்திகேயன் மற்றும் உதயநிதி ஆகியோரை இவ்விழாவிற்கு அழைத்திருந்தனர்.

விழாவில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன், ‘இரண்டு சிங்கங்களை ஆர்.ஆர். ஆர். படத்தில் நடிக்க வைத்துள்ளார்’ என்று புகழ்ந்தார்.  பதிலுக்கு ராம்சரணோ ‘எனக்கு பிடித்த நடிகர் சிவகார்த்திகேயன். தொகுப்பாளராக இருந்து, நடிகராக இந்தளவுக்கு உயர்ந்துள்ளார். அவர் சூப்பர் ஸ்டார் ஆகலாம்’ என்றுப் பேசிக் கொண்டாடிவிட்டார்.

tamil cinema news
tamil cinema news

இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர். மேடையில், நிகழ்வில் சிவகார்த்திக்கு கிடைத்த பாராட்டும்! ராஜமவுலி, ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். மூவரும் சிவகார்த்தியை கொண்டாடிய விதமும் தனுஷ் ரசிகர்களை மிக கடுமையாக உஷ்ணமாக்கியுள்ளது.

tamil cinema news
tamil cinema news

அவர்கள் தங்களின் சமூக வலைதள பக்கங்களில் “ராஜமவுலியும், ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் பாராட்டிப் பேசியுள்ளார்கள் என்பதற்காக சிவகார்த்தி ஒன்றும் பெரிய அப்பாடக்கர் இல்லை.

இரண்டு தேசிய விருதுகளை வாங்கிய எங்கள் தலைவரின் (தனுஷேதான்) திறமைக்கு பக்கத்தில் நிற்க முடியுமா சிவகார்த்தியால்?  எங்க ஆளு நேரடி ஹாலிவுட் மூவியிலேயே நெத்தியடியா நடிக்கிற ஆளு.” என்று கன்னாபின்னான்னு கலாய்க்கிறார்கள்.

ஆனாலும், ஆர் ஆர் ஆர் விழாவில் தனக்கு கிடைத்த சர்ப்பரைஸ் ப்ரமோவை நினைத்து உச்சி குளிர்ந்து போயிருக்கும் சிவகார்த்தி, அதனால் தனுஷ் அண்ட்கோ கடுப்பின் உச்சம் தொட்டிருப்பதை நினைத்து மகிழ்ச்சி டெம்போ எகிறி நிற்கிறார்.