விஜய் எப்பொழுதும் அப்படிபட்டவர் தான்…என ஓபனாக சொன்ன என்டி.ஆர்..!!

0
114

ஆர்ஆர்ஆர் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகியுள்ளது. இந்நிலையில் இயக்குனர் ராஜமௌலி, ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் மூவரும் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர்.

அப்பொழுது தளபதி விஜய் குறித்து கேட்டநிலையில், அதற்கு ஜூனியர் என்.டி.ஆர் பதிலளித்துள்ளார்.அவர் கூறியதாவது,

நடிகர் விஜய் சூப்பர் ஸ்டார், அன்பான மனிதர். நான் அவரிடம் நிறைய முறை பேசியுள்ளேன். மாஸ்டர் படத்திற்கு பிறகு போனில் பேசினேன். அவர் பெரிய நடிகர். மிகவும் அருமையான மனிதர். தலைக்கனம் இல்லாமல் சாதாரணமாக இருப்பார். என்னைவிட சீனியர். அவரிடம் நிறைய கற்றுக் கொள்ளலாம்.

எனக்கு அவரது நடனம் மிகவும் பிடிக்கும் எனக் கூறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.