உதயநிதியுடன் இணையும் பிரபல இயக்குநர்… இந்த மாதத்தில் சூட்டிங் துவக்கம்?…உண்மையா?

0
105

tamil cinema: நடிகர் உதயநிதி ஸ்டாலின் கண்ணை நம்பாதே, ஆர்ட்டிகிள் 15 படத்தின் ரீமேக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து கர்ணன் இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்தப் படங்களை அடுத்து முழு நேர அரசியலில் ஈடுபட போகிறார் என்று கூறப்படுகிறது.

நடிகர் மற்றும் அரசியல்வாதி என இரண்டு தளங்களில் தன்னை பிசியாக ஈடுபடுத்தி வருகிறார் உதயநிதி ஸ்டாலின். தமிழில் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வந்த ஸ்டாலின், அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

தமிழில் ஆரம்பத்தில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்களில் நடித்த உதயநிதி தொடர்ந்து கதைககு முக்கியத்துவம் தரும் கேரக்டர்களில் நடித்து சிறப்பான நடிகராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். தொடர்ந்து சிறந்த கதைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

மேலும் மகிழ் திருமேனியின் பெயரிடப்படாத படத்திலும் நடித்துவரும் உதயநிதி, அடுத்ததாக தனுஷின் கர்ணன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜின் படத்திலும் கமிட் ஆகியுள்ளார். மேற்குறிப்பிட்ட படங்களின் சூட்டிங்கை முடித்துவிட்டு மாரி செல்வராஜுடன இணைகிறார் உதயநிதி.