என்னது…வலிமை படத்தில் யுவனின் இசை இல்லையா ?

0
57

tamil cinema: அஜித்தின் வலிமை படத்தில் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவின் இசை இடம்பெறவில்லை என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படம் ஜனவரி 13 ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட வலிமை டிரைலர் 22 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளை கடந்து யூட்யூப்பில் புதிய சாதனை படைத்துள்ளது.

வலிமை படத்தில் யுவன்சங்கர் ராஜா இசையமைத்த நாங்க வேற மாரி, அம்மா பாடல் ஆகியன முறையே ஃபஸ்ட் மற்றும் செகண்ட் சிங்கிளாக வெளியிடப்பட்டன. டைரக்டர் விக்னேஷ் சிவன் எழுதிய இந்த இரு பாடல்களுமே ரசிகர்களை பெரிதும் கவர்ந்ததுடன் வேற மாரி ஹிட் அடித்தன.

இந்நிலையில் வலிமை படத்தின் ஒட்டுமொத்த இசை ஆல்பம் நேற்று வெளியிடப்பட்டது. இதில் நாங்க வேற மாரி, அம்மா பாடல், விசில் தீம் ஆகியன இடம்பெற்றிருந்தன. அதோடு வலிமை படத்திற்கு யுவன்சங்கர் ராஜா பின்னணி இசை அமைக்கவில்லை என்ற தகவலும் வெளியிடப்பட்டது. இதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஏற்கனவே அஜித் நடித்த ஆரம்பம், மல்காத்தா, நேர்கொண்ட பார்வை போன்ற படங்களுக்கு யுவன்சங்கர் ராஜா தான் பாடல் இசையுடன், பின்னணி இசையும் அமைத்திருந்தார். மாஸ் ஹீரோக்களுக்கு சிறப்பான தீம் மியூமிக் அமைப்பதில் கைதேர்ந்தவர் யுவன். அவரின் பின்னணி இசைக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. ஆனால் வலிமை படத்திற்கு அவர் பின்னணி இசை அமைக்கவில்லை என்ற தகவல் ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.