அட.. சமந்தாவ விடுங்க,ஐட்டம் பாட்டுக்கு ரெஜினா போட்ட குத்தாட்டத்தை பார்த்தீங்களா!

0
220

tamil cinima: தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா அண்மையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டிருந்தார்.

ஊ சொல்றியா மாமா.. ஊ ஊ சொல்றியா மாமா என்ற  அந்தப் பாடல் வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது.

இந்த நிலையில் தற்போது சமந்தாவை போலவே நடிகை ரெஜினா கலக்கலான ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் ஆச்சாரியா படத்திலிருந்து கலக்கலான ஐட்டம் பாடலின் லிரிக் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவுடன் ரெஜினா கிளாமரான உடையில் கவர்ச்சி ததும்ப துள்ளலாக ஆட்டம் போட்டுள்ளார். இந்த பாடல் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் உள்ளது.