அக்ஷரா, வருண் இருவரும் காதல் செய்கிறார்களா..? ஒன்றாக இருப்ப‌தை வெளியிட்டனர்..

0
136

tamil cinima :கடந்த சில நாட்களுக்கு முன்பு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலிருந்து அக்ஷரா, வருண் ஆகிய இரு போட்டியாளர்கள் ஒரே நாளில் ஜோடியாக வெளியேற்றபட்டனர்.

இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்கள் இருவரும் வெளியேற்றப்பட்டாலும் ரசிகர்களிடம் இவர்களுக்கு தொடர்ந்து ஆதரவும், அன்பும் செலுத்தி வருகிறார்கள்.

இதனிடையே தற்போது இவர்கள் இருவரும் ஒன்றாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த அறிவிப்பும் விரைவில் வர இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக சுற்றி வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.