கட்டிப்பிடிக்க அழைப்பு விடுத்த பீஸ்ட் பட நடிகை… அட்ரஸ் கேட்கும் நெட்டிசன்கள்…

0
53

tamil cinema: பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் படத்தின் 100-வது நாள் படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி இயக்குநர் நெல்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்தார்.

அந்த புகைப்படத்தின் மூலமாக பிரபலமாகினார் தான் நடிகை அபர்ணா தாஸ். அந்த புகைப்படத்தில் விஜய்க்கு அடுத்தபடியாக, ரசிகர்களின் மத்தியில் அதிக கவனம் ஈர்த்தார் அபர்ணா தாஸ்.

 

கேரளாவில், டிக்டாக் மூலம் வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமடைந்த அபர்ணா தாஸ் மலையாள சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தற்போது, தமிழில் பீஸ்ட் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்டு, “Who wants to Hug me” என பதிவிட்டுள்ளார். அதற்கு நெட்டிசன்கள் உங்கள் அட்ரஸ் கொடுங்கள் என பதிவிட்டு வருகின்றனர்.