காதலனை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்ற 17வயது காதலி..!!

18 வயது இளைஞனை முச்சக்கரவண்டியில் கடத்திச் சென்ற குறித்த இளைஞனின் 17 வயதுடைய காதலியையும் மற்றும் அவரது தந்தையையும் அகலவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று முன் தினம்(16) பிற்பகல் மஹகம பொலேகொட பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் தனது முச்சக்கரவண்டியை திருத்துவதற்காக சென்ற போது கடத்தப்பட்டுள்ளார்.

இதன்போது இளைஞன் தாக்கப்பட்டுக் கடத்தப்பட்டதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது . பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த இளைஞர் அவரது காதலியின் வீட்டில் இருப்பதாக‌ பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இளைஞனை மீட்ட பொலிஸார் மீட்டு வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். அத்துடன் இளைஞனின் காதலி மற்றும் அவரது தந்தை நேற்று (17) மத்துகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *