tamil cinema:நடிகை ரித்து வர்மா கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ரித்து வர்மா தமிழ் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
தெலுங்கில் பிரேமா இஷக்காதல் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான வேலை இல்லா பட்டதாரி திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தார்.
இவர் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் ஓகே ஓக ஜீவிதம் படத்தில் நடித்து வருகிறார். இவர் தமிழில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில் தற்போது செம்ம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

