தமிழ் சினிமா ஏன் கோலிவூட் என அழைக்கபடுகிறது தெரியுமா?

  0
  15

  தமிழ் சினிமா ஏன் கோலிவூட் என அழைக்கபடுகிறது தெரியுமா?

  மேலை நாட்டு திரைப்படங்களை ஹோலிவூட் என அழைக்கும் வழக்கம் காணப்படுகிறது. கலிபோர்னியாவில் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள ஒரு இடம் தான் ஹோலிவூட். உலகில் பிரபலமான கொலம்பியா பிக்ஸர்ஸ், பரமவுன்ட், யுனிவெர்ஸல், டிஸ்னி போன்ற சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் இங்கே தான் தோன்றின.

  இது 1903 ம் ஆண்டில தோன்றியதாக நம்பபடுகிறது,

  1886 ஆம் ஆண்டில், ஹார்வி ஹென்டர்சன் வில்காக்ஸ், கன்சாஸைச் சேர்ந்த ஒரு பணக்காரர் மற்றும் அவரது மனைவி டெய்டா, 120 ஏக்கர் தோப்புகளை ஏக்கருக்கு 150 டொலர் படி வாங்கினார்கள். ஹார்வி, ஒரு தொழிலதிபர், நிலத்தைப் பிரித்து, ஒரு பாப் 1000 டொலர் க்கு விற்பதன் மூலம் நிறைய பணம் சம்பாதிக்க முடியும் என்பதை உணர்ந்தார்.

  ஒரு வருடம் கழித்து, ஓஹியோவுக்குத் திரும்பும் ரயில் பயணத்தில், இல்லினாய்ஸில் ஒரு சிறந்த தோட்டத்தை சொந்தமாக வைத்திருக்கும் சக பணக்கார பயணியுடன் டேய்டா வில்காக்ஸ் நட்பு கொண்டார். அதன் பெயர் ஹாலிவுட். டேய்டா கலிபோர்னியாவுக்குத் திரும்பியதும், ஹார்வியின் பெயரைத் தங்கள் சொத்துக்களுக்குப் பயன்படுத்த ஊக்குவித்தார் என்று கதை கூறுகிறது. பிப்ரவரி 1, 1887 இல், ஹார்வி லாஸ் ஏஞ்சல்ஸ் பதிவு அலுவலகத்தில் “ஹாலிவுட்” என்ற பெயருடன் துணைப்பிரிவு வரைபடத்தை தாக்கல் செய்தார், அப்போது இருந்து ஹாலிவூட் என அழைக்கப்ட்டது

  இப்படி தான் இந்த பகுதி ஹோலி வூட் என்ற பெயரைப் பெற்று அங்கு உருவாகிய சினிமாவும் ஹோலிவூட் ஆனது

  ஹோலிவூட் சரி, கோலி வூட் கதையும் அப்படி தான், தமிழ் சினிமாவை சார்ந்த பலரும் நிறைந்திருக்கும் இடம் தான் கோடம்பாக்கம், கோடம்பாக்கம் என்ற சொல்லிருந்து தான் கோலி வூட் உருவாகி இருக்கிறது

  இதைப்போலவே மலையாள சினிமா மொலி வூட் எனவும், தெலுங்கு சினிமா டொலி வூட் எனவும் சொல்ல படுகிறது

  மும்பை முன்னர் பொம்பே என அழைக்கப்பட்டது நீங்கள் அறிந்தது தான், அதை வைத்தே ஹிந்தி சினிமாக்கள் பொலி வூட் ஆகியது