மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் உள்ள சிறூரில் சுற்றுலாவிற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் சென்று கொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் ,
பேருந்து ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் பேருந்தை இயக்க முடியாமல் பேருந்தை நிறுத்தி விட்டார். பின்னர் பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவர் பேருந்தை மருத்துவமனைக்கு இயக்கி உள்ளார். ஓட்டுனரை மருத்துவமனையில் சேர்த்து விட்டு பேருந்தில் இருந்த மற்ற அனைவரையும் அவரவர் இடங்களில் நிறுத்தம் செய்துள்ளார்.
வயதான அந்தப்பெண்ணின் பெயர் யோகிதா. இவர் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியவுடன் 10 கிலோ மீட்டர் வரை பேருந்தை மேலும் இயக்கியுள்ளார். பலரும் யோகிதாவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். செய்திதாள்கள் , யூடியூப் என அனைத்திலும் யோகிதாவின் பெயர் பேசப்பட்டு வருகின்றது.
A 40-year-old woman, #YogitaSatav saves a driver’s life who suffered a seizure. She drove the bus for around 10 Km to take the ailing driver to a hospital. The bus full of women passengers were returning from a trip. pic.twitter.com/f6SzuuLiGI
— Pune Mirror (@ThePuneMirror) January 15, 2022