தாய்லாந்தில் 19 வயது இளைஞருக்கும் 56 வயதான பெண்ணிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
அதன்படி Wuthichai Chantaraj (19) என்ற இளைஞர் தனக்கு பத்து வயதான போது முதன் முதலில் Janla Namuangrak (56) என்ற பெண்ணை பார்த்திருக்கிறார்.
அப்போது தனது வீட்டை சுத்தம் செய்ய Wuthichaiன் உதவியை Janla நாடியிருக்கிறார். இதன்பின்னர் இருவரும் நட்பானார்கள். கடந்த 2 ஆண்டுகளாக டேட்டிங் சென்று ஒரே வீட்டில் வசித்த நிலையில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
தங்களின் 37 வயது வித்தியாசத்தை மீறி உயிராக காதலித்த அவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. Wuthichai கூறுகையில், மிகவும் கடின உழைப்பாளியான Janla நேர்மையானவர். அவர் வீட்டை சுத்தம் செய்த போது தான் எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது, அவர் சிரமமின்றி வீட்டில் வாழ வேண்டும் என நினைத்து உதவினேன். எங்கள் வயது வித்தியாசம் பற்றி கவலையில்லை என கூறியுள்ளார்.
Janla கூறுகையில், என்னை Wuthichai மீண்டும் இளமையாக உணர வைக்கிறார். எங்கள் காதலை குடும்பத்தாரிடம் சொன்ன போது முதலில் அதிர்ச்சியடைந்தனர், நாங்கள் ஒன்றாக இருக்கிறோம், விரைவில் மண வாழ்வில் இணையவுள்ளோம் என கூறியுள்ளார்.
கணவரை விவாகரத்து செய்துவிட்ட Janla-க்கு 3 பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.