மிகவும் நூதனமான முறையில் 4 மில்லியன் ரூபாயை சுருட்டிய 19 வயது பெண்..!!

19 வயதான பெண் காசாளர் ஒருவர் சுமார் நான்கு மில்லியன் ரூபாவை மோசடி செய்ததாக சந்தேகதின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பெண் பேருவளையில் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்த போதே இவ்வாறு செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.குறித்த பெண் களுத்துறை விசேட மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயாகல, ஹல்கந்தவில, துவாகொட பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.பேருவளை, அம்பேபிட்டியகம பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவன உரிமையாளர் ஒருவர் பொலிஸில் செய்த முறைப்பாட்டிற்கமைய, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.12 ஊழியர்கள் பணிபுரியும் இந்த நிறுவனத்தில் 2023.06.09 முதல் 2024.02.06 வரை இந்த மோசடி நடந்துள்ளது.கடையின் கணினி அமைப்பு மற்றும் பாதுகாப்பு கமரா அமைப்பை ஆய்வு செய்த போது, பணத்திற்கும் வருமானத்திற்கும் இடையிலான வேறுபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.​​ வாடிக்கையாளர்கள் பணம் செலுத்திய 1475 பட்டியல்கள் இரத்து செய்யப்பட்டுள்ளமை இதன்போது தெரிய வந்துள்ளது.இந்தப் பணத்தை பட்டியல்கள் கணினி கட்டமைப்பில் பதிவு செய்து ஏமாற்றியதாக முறைப்பாட்டாளர் பொலிஸார் முறைப்பாடு செய்துள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *