என் இனத்திற்கு ஒண்டென்றால்..மிரட்டும் கம்பீர யானை தலைவன் இவன்…! வைரலாகும் வீடியோ…

0
64

tamil cinema: வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையவாசிகள் இடையே வெகுவாக கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வீடியோவில் யானை ஒன்று சாலையில் உள்ள வாகனங்களை தடுத்து நிறுத்துகிறது. மிகவும் கம்பீரமாக ஓடி வந்து சைக்கிளில் செல்பவரை விரைவாக செல்லும் படி துரத்துகிறது. யானையின் செயலை கண்டு பின்னர் வரும் வாகனங்கள் அஞ்சி நடுங்கி பின்னரே நிற்கின்றனர். அதன்பின் குரலொலி எழுப்பி பிற யானை கூட்டங்களை அழைக்கின்றது. இந்த வீடியோ இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதேபோன்று மற்றொரு வீடியோ ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார். அதில் நாய் ஒன்று ஓடும் நீரில் செய்வதறியாது நிற்கின்றது. செல்வதற்கு வழி தெரியாது கத்தி கொண்டு அங்குமிங்கும் பார்த்தபடி இருக்க அருகில் வந்த பெண் ஒருவர் நாயினை அரவணைத்த படி நாயினை தடவி கொடுக்கின்றார்.