29 November, 2022

ஹோட்டலுக்கு கூப்பிட்டு ஒன்றாக இருக்க சொன்னார்கள்..அப்சரா ராணி பேட்டி!

tamil cinema:தெலுங்கு படங்களில் நடித்ததால் பிரபலமான நடிகை அங்கிதா மஹாராணா. தனது பெயரை அப்சரா ராணி என மாற்றிக்கொண்டார். ராம்கோபால் வர்மாவின் படத்தில் கவர்ச்சியாகவும் நடித்து இருந்தார்.

இவர் தனக்கு சினிமாவில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து பேட்டியளித்துள்ளார்.இந்த பேட்டியில், “கன்னட சினிமாவில் படத்துக்கு நாயகியாக என்னை தேர்வு செய்து, கதை விவாதம் என ஹோட்டலுக்கு தனியாக வரச்சொன்னார்கள்.

நானும் ஹோட்டலுக்கு சென்ற போது, எங்களின் ஆசைக்கு இணங்கினால் வாய்ப்பு கொடுப்போம்” என்று தெரிவித்தார்கள்.ஹோட்டலுக்கு நன் தனியாக செல்லாமல், பாதுகாப்பு கருதி அப்பாவையும் துணைக்கு அழைத்து சென்றேன்.

அவர்களின் பேச்சுக்களில் உள்ள எண்ணத்தை புரிந்துகொண்ட நாங்கள் வந்துவிட்டோம். தெலுங்கு சினிமாவில் இந்த தொல்லைகள் இல்லை” என்று தெரிவித்தார்.

 

Share